Regional02

இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான : உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத் தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் 14 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 23,009 பேரில் 20,817 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இவர்களில் 1,785 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் இம்மாதம் 21-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதையொட்டி, அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், கரோனா பரவல் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் 21-ம் தேதி நடைபெற இருந்த காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், காவலர் பணி உடல் தகுதித் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT