Regional01

ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் :

செய்திப்பிரிவு

ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து நடமாட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. எனவே, ரயில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த இடங்களில் நடமாடும் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர் களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர் களுக்கு ரயில் நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ரயில்வே நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் அபராதம் விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT