Regional01

சேலத்தில் 100 டிகிரி வெயில் :

செய்திப்பிரிவு

சேலத்தில் 5 நாட்களுக்கு பின்னர் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து, நேற்று பகல்நேர அதிகபட்ச வெப்பம் 100.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி இறுதியிலேயே வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. தொடர்ந்து, படிப்படியாக அதிகரித்த வெயில் அதிகபட்சமாக 109.1 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலை யில், கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக கோடை மழை பெய்தது.

இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து வந்தது. கடந்த 13-ம் தேதி 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த வெயில், 14-ம் தேதி 95.9, 15-ம் தேதி 94.7, 16-ம் தேதி 98.3, நேற்று முன்தினம் 99.9 டிகிரி பாரன்ஹீட்டாக படிப்படியாக அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்தது.இந்நிலையில், நேற்று வெயில் 100.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. எனினும், கடந்த சில நாட்கள் பெய்த மழையின் காரணமாக, வெயிலின் தாக்கம் மக்களுக்கு சிரமத்தை கொடுக்கவில்லை.

SCROLL FOR NEXT