Regional02

சேலத்தில் 275 பேருக்கு தொற்று உறுதி : ஈரோட்டில் 226 பேருக்கு பாதிப்பு

செய்திப்பிரிவு

சேலத்தில் நேற்று 275 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனை களில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டனர்.

சேலத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 289 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 137 பேரும், ஓமலூரில் 15 பேர், மேச்சேரியில் 13 பேர், ஆத்தூர், தாரமங்கலத்தில் தலா 11 பேர், வீரபாண்டியில் 9 பேர், மேட்டூரில் 8 பேர், மகுடஞ்சாவடி, காடையாம் பட்டியில் தலா 7 பேர், நரசிங்கபுரம், எடப்பாடியில் தலா 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று தொற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து 186 பேர் வீடு திரும்பினர். தற்போது, மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 1,546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு

SCROLL FOR NEXT