கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர், நில வேம்புக் குடிநீர் வழங்க வேண்டும் என சித்தர் மரபுவழி தமிழ் மருத்துவர் தங்கதுரை, தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றின் முதல் அலை பரவியபோது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்துகள் கபசுரக்குடிநீர், நிலவேம்புக் குடிநீர் மத்திய, மாநில அரசுகளால் பொதுமக்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டு, மாவட்டம் தோறும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களிலும், பொது இடங்களிலும் வழங்கப் பட்டன.
தற்போது, கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீண்டும் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.