சூளகிரி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மாரண்டப் பள்ளியைச் சேர்ந்த 8 கூலித் தொழிலாளர்கள் நேற்று காலை சரக்கு வாகனத்தில் காருபாலா கிராமத்தில் கீரை அறுவடை பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சரக்கு வாகனம் கொரல தொட்டி என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இதில், சீனிவாசன் என்பவரின் மனைவி ஆஷா (24), கோவிந்தன் என்பவரின் மகன் துரைராஜ் (16), ராஜாமணி, சாந்தி, கோவி ந்தன், கவுரியம்மாள் ஆகிய 6 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கி ருந்தவர்கள் மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி ஆஷா, துரைராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் விசாரிக்கின்றனர்.