Regional03

விவசாய வாகனங்களுக்கு - சுங்கச் சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் விவசாயிகளின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பந்திரி நகரில் தமிழக விவசாயிகள் சங்க கிளை தொடக்க விழா ஒன்றிய தலைவர் பூபதி தலைமையில் நடந்தது. கிளை தலைவர் யோகநாதன் வரவேற்றார். சங்க கொடியை மாநிலத் தலைவர் ராமகவுண்டர் ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில், ‘நெல் ஒரு கிலோ ரூ.30 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண் டும். மல்லிகைப் பூக்களை இருப்பு வைத்து பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.

வேளாண் பணிகளுக்கு ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.வாணி ஒட்டு திட்டத்தை 200 அடியாக உயர்த்த வேண்டும். வனவிலங்குகளால் சேதமான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 15 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் விவசாயிகளின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோப்பைய்யா, மாவட்ட மகளிர் அணித் தலைவர் பெருமா, மாவட்ட செயளாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணிச் செயளாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT