Regional02

வாக்கு எண்ணும் மையங்களில் திருச்சி ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் மற்றும் முசிறி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், துறையூரில் உள்ள இமயம் கல்லூரியில் போலீஸ் பாதுகாப் புடன் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

இதேபோல, லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார். முசிறி சார் ஆட்சியர் ஜோதிசர்மா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT