Regional01

சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த 31 ஆண்டுகளாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அலுவலகத்தை மாவட்ட தலைநகரான தென்காசிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆறுமுகச்சாமி, திமுக நகர செயலாளர் சங்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலாளர் அசோக்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT