பாளையங்கோட்டையில் பலத்த காற்றில் பனை மரம் சாய்ந்து காரின் மீது விழுந்தது. படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

பலத்த காற்றுடன் நெல்லையில் மழை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது. திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மரக்கிளைகளும் முறிந்தன.

பாளையங்கோட்டையில் தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே பலத்த காற்றில் பனை மரம் சாய்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இதேபோல் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் மரம் சாய்ந்து இருசக்கர வாகனத்தில் விழுந்ததில் வாகனம் சேதமடைந்தது. மரங்கள் சாய்ந்தபோது அப்பகுதியில் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை.

SCROLL FOR NEXT