Regional03

இளம்பெண் கொலை கணவர் கைது :

செய்திப்பிரிவு

புளியங்குடியைச் சேர்ந்தவர் கண்ணன் (38). இவருக்கும், புளியரை அருகே உள்ள கீழ புதூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வானை என்பவரது பேத்தி கஸ்தூரி (19) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இருவரும் கோவையில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்தூரி கீழப் புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்து செங்கோட்டையில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தெய்வானையின் வீட்டுக்கு வந்த கண்ணன், புதூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கஸ்தூரியை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தெய்வானை அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீஸார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT