Regional03

300 வாக்கு எண்ணும் அலுவலர்கள் தூத்துக்குடியில் நியமனம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன் கூடிய இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரி யில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள் ளன. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணி க்கைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப் படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு 500 தபால் ஓட்டு களுக்கும் ஒரு மேஜை அமைக்கப் பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக சுமார் 300 வாக்கு எண்ணும் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளரும் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு விரைவில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT