நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கடைக்கு நேற்று காலை பார்சல் லாரி மூலம் பொருட்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த மின்மோட்டார் ஒன்றை ஒரு இளைஞர் தூக்கிச் சென்றுள்ளார்.அதைக்கண்ட மக்கள் அந்த இளைஞரைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த நாமக்கல் காவல் துறையினர் இளைஞரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் பரமத்தி வேலூரைச் சேர்ந்த பிரகாஷ் (25) என்பதும், மோட்டாரை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.