சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி ஓடாநிலையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மணி மண்டபத்தில் அவரது 265-வது பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் தீரன்சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் சமுதாய இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் சார்பில் மட்டும் மாலை அணிவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார். மொடக்குறிச்சி வட்டாட்சியர் சங்கர்கணேஷ், அரச்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.