Regional02

கள்ளக்குறிச்சியில் - லாட்டரி விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி வட்டம் ஏமாப்பேர்கிராமம் அண்ணா மலை நகரைச்சேர்ந்தவர் அரி என்ற அறிவழகன் (45). இவர் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை யில் ஈடுபட்டு வந்ததாக கிடைத்த தகவலின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

இவர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் லாட்டரி விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கள்ளக் குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து அறிவழகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT