Regional01

டவர் மீது ஏறி ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் :

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே மல்லாங் கிணரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). தனியார் பேருந்து ஓட்டுநர். கடந்த வாரம் இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.

ஆறுமுகத்தின் மனைவி அவரது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த ஆறுமுகம் நேற்று அப்பகுதியில் உள்ள மொபைல்போன் டவரில் ஏறி, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறினார். மல்லாங்கிணர் போலீ ஸார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆறுமுகத்திடம் பேசி சமாதானப்படுத்தி கீழே இறக் கினர்.

SCROLL FOR NEXT