காரைக்குடியில் ஆக்கிரமிப்பால் முக் கியச் சாலை பாதி மட்டுமே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள் ளனர்.
காரைக்குடி 30 அடி முதல் 120 அடி வரை அகலமான தெருக்களைக் கொண்ட திட்டமிட்டு அமைக்கப்பட்ட பாரம்பரிய நகரம். ஆனால், சில ஆண்டுகளாக இந்த வீதிகளை சிலர் ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள், திருமண மகால்கள், மருத்துவமனைகளைக் கட்டி வருகின்றனர்.
ஆனால் நகராட்சி அதிகாரிகள் இதனைக்கண்டுகொள்வதில்லை. அதேபோல் திட்டக் குழும அதிகாரி களும் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பதோடு சரி. கட்டிடங்கள் முறையாக கட்டப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதில்லை. காரைக்குடி கல்லூரிச் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சுப்பிரமணியபுரம் முதலாவது வீதி நகரின் முக்கிய வீதியாக உள்ளது.
நாற்பது அடி அகலம் கொண்ட இச்சாலையை சிலர் ஆக்கிரமித்து கடைகளைக் கட்டியுள்ளனர். இதனால் தற்போது அச்சாலையின் அகலம் பாதியாகக் குறைந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கீழத் தெரு அழகு கூறியதாவது: கடை வீதிகளைப் போன்று குடியிருப்பு பகுதிகளிலும் சிலர் கடைகளைக் கட்டி சாலைகளை ஆக்கிரத்து வருகின்றனர். சுப்பிரமணிபுரம் முதலாவது வீதி நகரின் முக்கிய வீதியாக உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் வீதியின் அகலம் குறைந்துவிட்டது.
இதேநிலை நீடித்தால் வீதி முழு வதும் ஆக்கிரமிக்கப்பட்டு சந்து போன்று ஆகிவிடும். அதற்கு முன்பாக ஆக்கி ரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.