ஈரோடு வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. 
Regional02

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம்3-வது நாளாக மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் ஈரோடு, கவுந்தப்பாடி, அம்மாப்பேட்டை, பவானி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: பெருந்துறை 36, ஈரோடு 19, கவுந்தப்பாடி 15, அம்மாப்பேட்டை 13. 2, பவானி 10, சென்னிமலை 4, வரட்டுப்பள்ளம் 2.4 மி.மீ., மழையளவு பதிவானது.

SCROLL FOR NEXT