கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க திருச்சி மாநகரில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்ற னர். அதன்படி, புத்தூர் அரசு மருத்துவமனை காவல்நிலைய சப் இன்ஸ் பெக்டர் கீதா மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் வயலூர் சாலையிலுள்ள சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உய்யக்கொண்டான் திருமலை மேலத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவா(30) முகக்கவசம் அணியவில்லை.
எனவே, போலீஸார் அவரிடம் அபராதத் தொகையைச் செலுத்து மாறு கூறினர். ஆனால் அதற்கு மறுத்த சிவா, திடீரென தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் கீதா அளித்த புகாரின்பேரில் சிவா மீது அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.