திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பழங்கனாங் குடியில் தங்க முனீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோயிலுக்குள் புகுந்து திருடிக் கொண்டிருந்த 2 பேரை அப்பகுதி மக்கள் பிடித்து துவாக் குடி காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.
விசாரணையில் அவர்கள் அசூரைச் சேர்ந்த செல்லையா(23), சக்திவேல்(23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 15 பித்தளை மணிகள், இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்தனர்.