Regional02

கரோனா பரவலை தடுக்க பேருந்துகளில் ஆர்டிஓ சோதனை :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி நேற்று பெரம்பலூரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு விதி முறைகளை பின்பற்றாத பேருந்து களின் ஓட்டுநர், நடத்துநர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துகளில் ஏற்ற வேண்டும், இருக்கை அளவின்படி மட்டுமே பயணிகளை ஏற்றவேண்டும். நின்றுகொண்டு செல்லும் வகையில் பயணிகளை ஏற்றக் கூடாது ஆகிய விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

விதிமுறைகளை மீறினால் மோட்டார் வாகன விதிப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.

SCROLL FOR NEXT