Regional03

உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

உரவிலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வி.ஜெயபால் தலைமை வகித்தார்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இரா. சுர்ஜித் உட்பட பலர் பங்கேற்று, உர விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT