திருச்சி மாவட்டம் புலிவலம் அருகேயுள்ள அபினிமங்கலம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தேங்காய் வியாபாரியான இவர், நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி மற்றும் மகன்களுடன் ஓமாந்தூரிலுள்ள தேங்காய் கடைக்குச் சென்று விட்டார்.
மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், லேப்டாப், ரூ.20ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் புலிவலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.