தி.மலையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ள நடிகர் விவேக்கின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என திமுக முன்னாள் அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “திரைப்பட நடிகரும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மீது தீரா அன்பு கொண்டவரும், 1 கோடி மரம் நடும் கீரின் கலாம் அமைப்பின் தலைவரும், தூய்மை அருணை திட்டத்தின் நிரந்தர சிறப்பு அழைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், மரங்களை நேசித்தவருமான நடிகர் விவேக் மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு ஏற்றுக்கொள்ள முடியாது.
கலைஞரால் பாராட்டப்பட்டவர்
தூய்மை அருணை சார்பில் திருவண்ணாமலையில் பலமுறை கலந்து கொண்டு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ள நடிகர் விவேக்கின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாது.
திரைப்பட நடிகர்களின் மத்தியில் பொதுத் தொண்டு செய்யக்கூடியவர் என்ற பெருமையும் உடையவர் நடிகர் விவேக்” என தெரிவித் துள்ளார்.