தி.மலை நகர தேனிமலை பணிமனையில் அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
Regional03

தி.மலை நகர தேனிமலை அரசு பணிமனையில் - போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி :

செய்திப்பிரிவு

தி.மலையில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதேபோல், அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, தி.மலை நகரம் தேனிமலையில் உள்ள முதலாவதுமற்றும் இரண்டாவது பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. துரிஞ்சாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜா தலைமையிலான குழுவினர், தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 620 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த பணி நாளை (19-ம் தேதி) மற்றும் நாளை மறு நாள்(20-ம் தேதி)யும் நடைபெற உள்ளது.

சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT