சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த தேசிங்குராஜ் என்பவரது பட்டாசு ஆலை, வச்சக்காரப்பட்டி அருகே உள்ள சதானந்தபுரத்தில் இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் நேற்று முன்தினம் பிற்பகல் பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அறையில் பணியாற்றிய ஆனையூரைச் சேர்ந்த ஆதிலட்சுமி (34) 100% தீக்காயமடைந்தார். ஆனையூரைச் சேர்ந்த செந்தி(35), முத்துமாரி(37), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40) ஆகியோர் 70% தீக்காயம் அடைந்தனர். இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆதிலட்சுமி நேற்று முன்தினம் இரவு இறந்தார். மற்ற மூவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.