கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழி லாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மாலை கட்டிடத்தின் 3-வது மாடியில் கட்டிட மேஸ்திரியாக ஒரிசா மாநிலம் கஞ்சன் மாவட்டம் ஜீரபாடி கிராமத்தைச் சேர்ந்த பீமாபத்ரா மகன் ஜிகாபத்ரா (20) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர் பாக குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.