Regional03

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

செய்திப்பிரிவு

சூளகிரி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணி யாற்றும் 25 ஆசிரியர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இதே போல், சேம நல நிதிக்கு விண்ணப்பித்து 11 மாதங்கள் கடந்தும் பணப்பலன் வழங்கப்படாமல் காலதாமதம் செய்து வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு சூளகிரி வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் சிலர் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் நேற்று சூளகிரி வட்டார கல்வி அலுவலர் சதீஷ், இளநிலை உதவியாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்களை கண்டித்து, 25-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியர்கள, தமிழக ஆசிரியர் கூட்டணி சூளகிரி வட்டார கிளை தலைவர் செந்தில்வேல், செயலாளர் எபனேசர் ஆகியோர் தலைமையில், வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வட்டார கல்வி அலுவலர் சதீஷ் பேச்சு வார்த்தை நடத்தி, பிப்ரவரி மாத்திற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஊதியம் வங்கி கணக்கிற்கு வரும் வரை, ஆசிரிய, ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

SCROLL FOR NEXT