தமிழ்நாடு மருத்துவர் சமூகநலச் சங்கம் சார்பில் நேற்றுவிழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 4-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியை இழிவு படுத்தி உள்ளனர். எனவே இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீதுதக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இப்படத்தை முற்றிலும் தடை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.