விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்ளராஜகிரி கோட்டையின் நுழை வாயிலில் கதவு பூட்டப்பட்டுள்ளது. 
Regional01

கரோனா காரணமாக செஞ்சிக் கோட்டை மூடப்பட்டது :

செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து புராதன சின்னங்கள், இடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் செஞ்சிக் கோட்டைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதில் வெளிநாட்டில் இருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கரோனோ தொற்றை தடுக்கும் பொருட்டு செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அடுத்த மாதம் மே 15-ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிட்டு செஞ்சி கோட்டை நுழைவாயிலை தொல்லியல் துறையினர் அடைத்துள்ளனர். இதனால் செஞ்சிக் கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

SCROLL FOR NEXT