சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. 
Regional03

அண்ணாமலை பல்கலை. சார்பில் - கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலகு 16- ன் சார்பில் நேற்று கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

திட்ட அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில் தமிழக அரசு சார்பில் கரோனா தடுப்பு பூசி போடப்படும் மையத்துக்கு சென்று அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இணைப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலகு16-ன் திட்ட அலுவலர் முனைவர் ராஜ்பிரவின் வரவேற்று பேசுகையில் கரோனா தடுப்பூசியின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி போன்றவை நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் வழங்கப்பட்டது. தொழில் நுட்ப அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT