ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகேயுள்ள அண்ணா வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பவிஷ் (15) 10-ம் வகுப்பு மாணவர். நேற்று முன்தினம் மாலை தனது 3 நண்பர்களுடன், பஞ்சலிங்கபுரம் சிலுவன் கொம்பு பகுதி காவிரி ஆற்றிற்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் 4 பேரும் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர்.
இதில் ஆழமான பகுதிக்குச் சென்ற பவிஷ், ஆற்றில் மூழ்கி மாயமானார். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் பவிஷைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு மாணவர் பவிஷ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.