Regional02

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு :

செய்திப்பிரிவு

கரூர் தாந்தோணிமலை அருகே யுள்ள முத்தலாடம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சுமதி(36) பாளையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

தாளியாபட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, பாட்டிலில் வைத்திருந்த தண் ணீரை குடித்துள்ளார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர், அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT