Regional02

கரோனா பரவலை காரணம் காட்டி - இலக்கு நிர்ணயித்து வணிகர்களிடம் கட்டாய அபராதம் வசூலிக்க கூடாது : வணிகர் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை காரணம் காட்டி வணிகர்களிடம் இலக்கு நிர்ணயித்து கட்டாய அபராதம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சண்முகநாதன், செயலாளர் சாமி.இளங்கோவன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளது:

கரோனா பெருந்தொற்று 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருவதாகக் கூறி, அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பொதுமக்களையும், வணிகர்களையும் பெருமளவு பாதித்துள்ளது.

காவல், வருவாய், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் வணிகர்கள் மீது இலக்கு வைத்து கட்டாயம் அபராதம் விதிப்பதும், தண்டனைக்கு உள்ளாக்குவதும் கரோனா காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல, வணிகர்களிடம் இலக்கு நிர்ணயித்து அபராதம் விதித்து கட்டாய வசூலில் ஈடுபடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT