தஞ்சாவூர் மாவட்ட வருவாய்த் துறை சார்பில் பல்வேறு இடங் களில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்களாக பணி யாற்றியவர்களுக்கு நீதித் துறை பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சி கடந்த டிச.17-ம் தேதி முதல் ஏப்.15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் பயிற்சியை முடித்த 7 வட்டாட்சியர்கள், ஒரு துணை வட்டாட்சியருக்கு தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்த ராவ் நேற்று முன் தினம் பணியிட உத்தரவு வழங்கினார்.
அதன்படி, கும்பகோணம் நகர நிலவரித் திட்ட தனி வட் டாட்சியராக சுசீலா, கும்பகோணம் தனி வட்டாட்சியராக பிரேமாவதி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி வட்டாட்சியராக குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராக முருககுமார், கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக பெர்சியா, தஞ்சாவூர் கோட்ட கலால் அலுவலராக சீமான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவிடைமருதூர் கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக மணிகண்டன் நியமிக் கப்பட்டுள்ளார்.