விவசாயத் தேவைக்கான உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாநகரச் செயலாளர் வசந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, தரைக்கடை வியாபாரிகள் சங்க(சிஐடியு) மாவட்டச் செயலாளர் மில்லர் பிரபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் ஹரிபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.