தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கத் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள் ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசி, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து ஆட்சியர் ம.கோவிந்த ராவ் நேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது, பேருந்தில் ஏறி ஆய்வு செய்த அவர், பயணிகள் முறையாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில், கரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி, “முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வரக் கூடாது. முக்கிய இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என தொடர்ந்து அறி வுறுத்தி வருகிறோம்.
காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறையினர் ஒருங்கிணைந்து, அனைத்து இடங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும். எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனை வரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
கரோனா 2-வது அலையில், வீட்டில் ஒருவருக்கு தொற்று வந்தாலே, வீட்டிலுள்ள அனை வருக்கும் பரவுகிறது. எனவே, தொற்றால் பாதிக்கப் படுபவரின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் தவறாமல் பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் 50-க்கும் மேற் பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சிறப் பாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து ஊக்கப் படுத்தி வருகிறோம். மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. தேவையான அளவுக்கு இருப்பு உள்ளன. எனவே, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.