திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மாக 10 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது.
இதுபோல் சேர்வலாறு அணைப்பகுதியில் 3 மி.மீ., கொடுமுடியாறு அணைப்பகுதியில் 7 மி.மீ., பாளையங்கோட்டையில் 2 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
பாபநாசம் அணையில் நீர்மட்டம் 105.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடி க்கு 77.66 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 104.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 92.75 அடியாக இருந்தது. 8 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 150 கனஅடி திறந்து விடப்பட்டது.மற்ற அணைகளின் நீர் மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர் மட்டம்):
சேர்வலாறு- 118.63 அடி (156 அடி), வடக்கு பச்சை யாறு- 43.42 அடி (50), நம்பி யாறு- 12.72 அடி (22.96), கொடுமுடியாறு- 6.25 அடி (52.50).
குமரியில் நீடிக்கும் சாரல்
மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு ஓரளவு நீர்வரத்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 17 மிமீ மழை பெய்தது. அணைக்கு 273 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது. கன்னிப்பூ நெல் நாற்றங்கால் பாவும் பணிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த சாரல் மழை பெரிதும் கைகொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.