Regional03

சாத்தான்குளம், உடன்குடியில் - முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி : கிலோ ரூ.2-க்கு கொள்முதல்: விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், உடன்குடி பகுதிகளில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ 2 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் விவசாயிகளிடம் முருங்கைக்காய் கிலோரூ.40-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.4-க்குவிற்று வந்த நிலையில், நேற்றுரூ.2-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

முருங்கை விவசாயிகள் பாலமுருகன், டேவிட் வேதராஜ் ஆகியோர் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக காலையில் ஏற்படும் கோடைமழை காரணமாகமுருங்கைக்காய் கலர் மாறியுள்ளது. தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆந்திராவில் இருந்தும் முருங்கைக்காய் பெருமளவில் விற்பனைக்கு வருகிறது. இதனால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலை அடுத்த மாதம் மாறும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

SCROLL FOR NEXT