Regional01

உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் - 30-ம் தேதிக்குள் உறுதி மொழி சான்றை சமர்ப்பிக்க வேண்டும் : தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், உறுதி மொழிச் சான்றை வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மன வளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பரா மரிப்பு உதவித் தொகை, தொழு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை என மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் பராமரிப்பு உதவித் தொகை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத் திறனாளிகள், உயிருடன் உள்ளார் என்பதற்கான உறுதி மொழிச் சான்றை வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நேரில் வரவேண்டியதில்லை...

அதன்மூலம் 2021-22-ம் ஆண்டுக் கான உதவித் தொகையை தடை யின்றி பெறலாம். இதற்காக, மாற்றுத்திறனாளிகள் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. மேலும், விவரங்களுக்கு 04175-233626 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT