தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
இதையொட்டி, செங்கம் சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் மகாபாரத சொற் பொழிவாற்றி வருகின்றனர். அவர்களை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் அவர், சுவாமி தரிசனம் செய்தார்.
முக்கிய விழாவாக வரும் 25-ம் தேதி காலை படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும், 26-ம் தேதி தருமர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.