Regional01

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு :

செய்திப்பிரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 97.91 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு பருவமழைக் காலமான ஜூன் தொடங்கி நவம்பர் வரையிலும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கோடை காலத்தில் நீர்வரத்து மிகவும் குறைவாகவே இருக்கும். தற்போது, கோடை தொடங்கிய நிலையில், நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று அணைக்கு விநாடிக்கு 92 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகம் இருப்பதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 98.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.91 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 62.16 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT