Regional02

பர்கூர் அருகே விவசாயியை தாக்கி இருசக்கர வாகனம், பணம் வழிப்பறி :

செய்திப்பிரிவு

பர்கூர் அருகே விவசாயியை தாக்கி, இருசக்கர வாகனம், பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜெகினிகொல்லை மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரத்தினம் (60). தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை, கிருஷ்ணகிரி சந்தையில் விற்றுவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே உள்ள பிஆர்ஜி மாதேப்பள்ளி கிராமம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே, அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் ரத்தினத்தை மறித்து இரும்பு கம்பியால் தாக்கினர்.

அப்போது தடுமாறி கீழே விழுந்தவரிடம் இருந்து இருசக்கர வாகனம், ரூ.6 ஆயிரம் ரொக்கம், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு தப்பியோடினர். காயம் அடைந்த ரத்தினத்தை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT