Regional02

மனைவி தற்கொலை கணவர் கைது :

செய்திப்பிரிவு

நெல்லை மாவட்டம் இட்டாமொழி அருகே உள்ள தர்மராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் சிவசத்யா(27). இவருக்கும், குமரி மாவட்டம் இறைச்சிகுளத்தைச் சேர்ந்த மகேஷுக்கும்(30) கடந்த 2015-ல் திருமணம் நடைபெற்றது.

திருவள்ளூரில் ஏ.சி. மெக்கானிக் ஏஜென்டாக மகேஷ் பணிபுரிகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சிவசத்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சிவசத்யாவின் தந்தை ராஜ்குமார், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "சிவசத்யாவிடம் நகை, பணம் கேட்டு மகேஷ் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.

மகேஷுக்கும், வேறொரு பெண்ணுடன் தவறான நட்பு இருந்துள்ளது. இதனால் மனமுடைந்து சிவசத்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் பேரில் போலீஸார், மகேஷை கைது செய்தனர். மேலும், திருவள்ளூர் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவியும் விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT