Regional03

எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா :

செய்திப்பிரிவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ஏழுமலை. இவருக் கும், பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் முன் விரோதம் உள்ளது. கடந்த 6-ம் தேதி இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, திருவெண் ணெய்நல்லூர் போலீஸில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று ஏழுமலை தன் குடும்பத்தாருடன் விழுப்புரம் எஸ்பி அலுவலக நுழைவு வாயில் முன்பாக, தர்ணாவில் ஈடுபட்டார். இதை யடுத்து அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி எஸ்பியிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர்.இதையடுத்து ஏழுமலை எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார்.

SCROLL FOR NEXT