போச்சம்பள்ளியில் நேற்று காலை கனமழை பெய்தது. 
Regional03

கிருஷ்ணகிரி, தருமபுரியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை : அதிகபட்சமாக நெடுங்கல்லில் 70.4 மிமீ மழை பதிவானது

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந் நிலையில் நேற்று முன்தினம் சூளகிரி, சின்னகொத்தூர், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

பின்னர், நள்ளிரவில் நெடுங்கல், கிருஷ்ணகிரி நகர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை வரை பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மின்தடை

நெடுங்கல்

தருமபுரி

ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மழை அளவு மில்லிமீட்டரில், பாப்பிரெட்டிப்பட்டி 36.2, அரூர் 6, மாரண்டஅள்ளி 4, பென்னாகரம் 5, ஒகேனக்கல்லில் 28 மி.மீ. பதிவாகி இருந்தது.

SCROLL FOR NEXT