ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா இன்று (ஏப்.16) நடைபெறவுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, காவல் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிகிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி (பொறுப்பு) மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
விழாவை முன்னிட்டு 2 ஏடிஎஸ்பிக்கள், 8 டிஎஸ்பிக்கள், 38 ஆய்வாளர்கள், 78 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், டிஎஸ்பிக்கள் கணேஷ், பிரகாஷ், வெங்கடேசன், காட்வின் ஜெகதீஸ்குமார்,பழனிக்குமார், சங்கர், முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.