Regional01

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி போலீஸார் அறிவுரை :

செய்திப்பிரிவு

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து போலீஸார் நேற்று இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, அதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த 1,174 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதமாக இதுவரை ரூ.2.34 லட்சம் காவல்துறை சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 67 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதமாக ரூ.33,500 வசூலிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT