திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட சுவாமி அலங்காரத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலை வர் இ. அழகுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: கோயில் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு அலங் காரம் செய்யும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஓராண்டு க்கும் மேலாக கரோனா கட்டுப்பாடுகளால் எவ்வித தொழில்களும் செய்யமுடியாமல் தொழிலாளர்களும், அவர் களது குடும்பத்தினரும் கஷ்டப் படுகிறார்கள். கடந்த ஆண்டும் எவ்வித உதவி தொகையும் வழங்கப்படவில்லை.
இப்போது தடை உத்தரவு காரணமாக தொழிலாளர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோயில் திருவிழாக்கள் மற்றும் அலங்காரத் தொழிலா ளர்கள் தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்கிணறு பகுதியிலுள்ள மணிமாலை புதுகுளம் மற்றும் சிவசுப்பிரமணியபுரம் வடுசாடி குளம் ஆகியவற்றை தூர்வாரி கரைகளை பலப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நம் அனுமன் நதி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.