கரோனா விதிமீறல் தொடர்பாக, தமிழகத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 6.44 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (ஏப்.14) வசூல் செய்த அபராதம் குறித்த விவரங்களை அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.72,81,650 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6,44,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் கு.கணேசன் தலைமையில் ஆய்வு நடந்தது. இதில், முகக்கவசம் அணியாமல் வந்த 28 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.